Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

By: vaithegi Sat, 28 Jan 2023 12:42:11 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. இதேபோல் நேற்று முன் தினம் ஒரு சவரன் 43 ஆயிரத்தை தாண்டியது. நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,345ஆக விற்பனை செய்யப்பட்டது.

மேலும் சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.42,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேசமயம், வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.74.60 ஆகவும், ஒரு கிலோ ரூ.400 குறைந்து ரூ.74,60 ஆக விற்பனை செய்யப்பட்டது.

gold,chennai,silver ,தங்கம் ,சென்னை,வெள்ளி

இதையடுத்து இன்றைய விலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூ.5,350 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 அதிகரித்து ரூ.42,800என விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 11 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5842.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46,736.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து ரூ.74.20 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 74,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|