Advertisement

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை என்ன என்பது பற்றி பார்ப்போம்

By: vaithegi Sun, 04 June 2023 12:02:16 PM

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை என்ன என்பது பற்றி பார்ப்போம்

சென்னை : நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தின் காரணமாக பங்குச்சந்தையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை உயர்வதும் குறைவதுமாக இருந்து கொண்டு வருகிறது.

இதையடுத்து ஜூன் முதல் வாரத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் நகை பிரியர்கள் நகை வாங்குவதில் ஆர்வம் கட்டி கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 77 குறைந்து 6037 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 616 குறைந்து 48,296 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

gold price,chennai ,தங்கத்தின் விலை,சென்னை

மேலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 45 ஆயிரத்துக்கும் குறைந்திருப்பதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து 77.80 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அதை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :