Advertisement

தொடர்ந்து உயரும் தங்கம் விலையால் மக்கள் கலக்கம்

By: vaithegi Thu, 26 Jan 2023 2:53:30 PM

தொடர்ந்து உயரும் தங்கம் விலையால் மக்கள் கலக்கம்

சென்னை: டாலரின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவி வரும் அழுத்தம் உள்ளிட்ட பல காரணிகளால் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றம் நீடித்து வருகிறது. இதையடுத்து நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கம் விலையானது 4% ஏற்றத்தினை கண்டுள்ளது. தொடர்ந்து தங்கம் விலை உயர்வை சந்தித்த நிலையில் நேற்று தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது.

அதாவது நேற்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,345-க்கு விற்பனையானது. அதே போன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.42,760-க்கு விற்கப்பட்டது.

gold,sale ,தங்கம் ,விற்பனை

இதையடுத்து இந்த நிலையில் இன்று (26.01.2023) சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.43,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,380க்கு விற்கப்படுகிறது.

அதே சமயம் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 அதிகரித்து ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|