Advertisement

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை அதிரடி குறைவு!

By: Monisha Sat, 20 June 2020 6:32:27 PM

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை அதிரடி குறைவு!

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 38,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதால் இதன் விலையும் உயர்த்தப்பட்டு ரூ. 41999 ஆக மாறியது.

இதைத் தொடர்ந்து, கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 4 ஆயிரம் குறைக்கப்படுவதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் 6ஜிபி ரேம் மாடல் ரூ. 37999 விலையிலும், 8ஜிபி ரேம் மாடல் ரூ. 39999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

samsung,galaxy note 10 lite,smartphone,price ,சாம்சங்,கேலக்ஸி நோட் 10 லைட்,ஸ்மார்ட்போன்,விலை

விலை குறைப்பு மட்டுமின்றி சிட்டிபேங்க் வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால் சிட்டிபேங்க் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் 6ஜிபி வேரியண்ட்டைடை ரூ. 32999 விலையிலும், 8ஜிபி வேரியண்ட்டை ரூ. 34999 விலையிலும் வாங்க முடியும்.

இவைதவிர கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் அதிகபட்சம் ஒன்பது மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும், இரண்டு மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வங்கி சலுகை ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

Tags :