Advertisement

தங்கம் விலை கடந்த 3 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு

By: vaithegi Wed, 30 Nov 2022 12:36:46 PM

தங்கம் விலை கடந்த 3 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு

சென்னை: இன்று உயர்வு .... தங்கம் என்பது ஒரு ஆடம்பர பொருளாக இல்லாமல் முதலீடு செய்ய உகந்ததாக இருக்கிறது. அதனால் பலர் தங்கம் விலை எவ்வளவு இருந்தாலும் அதில் முதலீடு செய்ய தயங்குவது இல்லை. இதையடுத்து இந்த நிலையில் தங்கம் விலையானது ஒரு நாள் உயர்வையும் ஒரு நாள் குறைவையும் சந்தித்து கொண்டு வருகிறது.

அதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் தினமும் தங்கம் விலையை தெரிந்து கொண்டு வாங்கலாம். அந்த வகையில் தங்கம் விலை கடந்த 3 நாட்களாகவே குறைந்தது.

gold price,silver , தங்கம் விலை,வெள்ளி

அதனால் நகைப்பிரியர்கள் தங்கத்தை வாங்க ஆர்வம் செலுத்தினார்கள். ஆனால் இன்றைய நிலவரப்படி கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து அதன் படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகாரத்து ரூ.4,936 எனவும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ரூ.39,488ஆக உயர்ந்துள்ளது.

மேலும் வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி இருக்கிறது, அதன் படி வெள்ளி கிராம் ரூ.68 எனவும், கிலோ ரூ.68,000 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :