Advertisement

கடந்த 2 நாட்களாக உயர்வில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவு

By: vaithegi Sat, 03 June 2023 3:43:25 PM

கடந்த 2 நாட்களாக உயர்வில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவு

சென்னை : தங்கத்தின் விலை இன்று சரிவில் இருப்பது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ..... இன்று 1 கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5580.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் ஆபரணத் தங்கம் 44,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 6114 ரூபாய்க்கும், சவரனுக்கு 48 ஆயிரத்து 912 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று சென்னையில் தங்கத்தின் விலை ரூ.58 குறைந்திருக்கிறது.

jewelery gold price,chennai , ஆபரணத் தங்கத்தின் விலை,சென்னை

அதாவது, சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 6,056 ரூபாய்க்கும், சவரனுக்கு 48 ஆயிரத்து 448 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சென்னையில் நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு 78.60 விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 8 காசுகள் குறைந்து 77.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து 1 கிலோ வெள்ளி விலை நேற்றைய விலையிலிருந்து இன்று குறைந்து ரூ.77800 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :