Advertisement

தொடர்ந்து 135-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமில்லை

By: vaithegi Mon, 03 Oct 2022 08:45:46 AM

தொடர்ந்து 135-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமில்லை

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொண்டு வருகின்றன.

தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. சென்னையில் மே 21 வரையில் நீண்ட நாட்களாக பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி அதே விலையில் நீடித்து வந்தது

இந்த நிலையில், மே -21-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்

petrol,diesel ,பெட்ரோல், டீசல்

சென்னையில் (மே 22ம் தேதி) பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்று (அக்டோபர் 3-ம் தேதி) பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகின்றது

இந்தியாவின் அண்டை மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்திற்கு சென்றாலும் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது

Tags :
|