Advertisement

இன்று தங்கம் விலை சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

By: vaithegi Thu, 29 Dec 2022 1:28:19 PM

இன்று தங்கம் விலை சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதையடுத்து தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிகரிக்கும் தங்கத்தின் விலை பெண்களுக்கும், நகைகள் வாங்க திட்டமிட்டவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது.தமிழகத்தை பொறுத்தவரை புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளதால் மக்கள் நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காண்பிப்பர்.

gold price,jewellers,festivals ,தங்கம் விலை, நகைப்பிரியர்,பண்டிகைகள்

ஆனால் இத்தகைய நேரத்தில் தங்கத்தின் விலை உயர்வு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நேற்று ஒரு கிராம் தங்கம் 5,105க்கு விற்பனையாகி வந்தது.இதன் விலை இன்று குறையுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 சரிந்து ரூ. 40, 760 க்கு விற்பனையாகி வருகிறது.

அதே போன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 10 சரிந்து ரூ. 5095 க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் வெள்ளி ஒரு கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.74.00க்கு விற்பனையாகி வருகிறது.

Tags :