Advertisement

தொழில்நுட்ப கோளாறால் திரும்பப் பெறும் வேக்ஸ்வோகன் ரக வாகனங்கள்

By: Nagaraj Mon, 05 Dec 2022 10:37:23 AM

தொழில்நுட்ப கோளாறால் திரும்பப் பெறும் வேக்ஸ்வோகன் ரக வாகனங்கள்

கனடா: கனேடிய சந்தையில் விற்பனை செய்யப்படவிருந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம் இதில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளால் விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக திரும்ப பெறப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேக்ஸ்வோகன் ரக வாகனங்கள் இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் 3759 இலத்திரனியல் அவுடி வாகனங்கள் இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

canada,market,recover,cars,risk,avoid ,கனடா, சந்தை, மீளப்பெறுகின்றன, கார்கள், ஆபத்து, தவிர்த்தல்

இந்த வாகனங்கள் விபத்து ஏற்படக்கூடிய சாத்தியங்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2019 மற்றும் இந்த ஆண்டு வரையில் விற்பனை செய்பய்பட்ட ஆடி A6 மற்றும் A7 ரக வாகனங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

பின் ஆசனத்தில் ஏதேனும் திரவம் ஊற்றப்பட்டால் வாகனம் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் காணப்படுகின்றது. இதனால் வாகனம் செலுத்தப்படும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் ஆடி இலத்திரனியல் வாகனங்கள் கனேடிய சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

Tags :
|
|
|
|