Advertisement

பண்டிகை நாளான இன்று தங்கத்தின் விலை என்ன

By: vaithegi Sun, 25 Dec 2022 3:09:14 PM

பண்டிகை நாளான இன்று  தங்கத்தின் விலை என்ன

சென்னை: இந்தியாவில் தற்போது நிலவும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு மத்தியில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் பயன்பாடு எப்போதும் அதிகமாக இருக்கும்.

அதிலும் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் மக்கள் அதிக அளவு தங்கத்தை வாங்க முயற்சிப்பார்கள்.அதனால் இத்தகைய நாட்களில் வழக்கத்தை விட தங்கத்தின் விலை சற்று அதிகமாகவே இருக்கும்.

gold price,festival,chennai ,தங்கத்தின் விலை,பண்டிகை ,சென்னை

இதனை அடுத்து நாள்தோறும் தங்கத்தின் விலை பங்குச்சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து கிராம் ஒன்று 5,076க்கு விற்பனையாகி வந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடித்து வருகிறது. எனவே அதன் படி கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான இன்று ஒரு சவரன் தங்கம் ரூ. 40, 608 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நேரத்தில் தங்கம் விலை அதிகரிப்பது மக்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :