Advertisement

Whatsapp புதிய வசதி அறிமுகம்

By: vaithegi Tue, 24 Jan 2023 4:51:12 PM

Whatsapp  புதிய வசதி அறிமுகம்

இந்தியா: மெட்டா நிறுவனத்தின் செயலியான Whatsapp மக்கள் அதிகம் பயன்படுத்தும் தகவல் பற்றிமாற்ற செயலியாக இருக்கிறது. இந்த செயலியில் பயனர்களின் வசதிக்காக ஏகப்பட்ட புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய பயன அனுபவம் தரும் User Interface வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதையடுத்து இந்த புதிய வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரு பயனர்களும் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் Message Yourself feature, Search by Date Feature, Drag And Drop போன்ற வசதிகளையும் Whatsapp நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இவ்வசதிகளில் முக்கியமான சிறப்பு வசதிகளும் இருக்கின்றன.

whatsapp,app,feature ,Whatsapp  ,செயலி,வசதி

அவை Search by Date மற்றும் Drag and Drop ஆகியவை ஆகும். இந்த வசதியின் படி நாம் அனுப்பும் மெசேஜ் எந்த தேதியில் அனுப்பப்பட்டது என தெரிந்து கொள்ளலாம். எனவே இதன் மூலம் நமது பழைய டேட்டாவை தேவைப்படும் நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை: Whatsapp செயலியை திறக்க வேண்டும். அதில் Search Box என்பதை திறந்து கொள்ள வேண்டும். Search Box திறந்ததும் அதில் வலது பக்கம் Calendar போன்ற Icon இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும் Calender ஆப்ஷன் கிளிக் செய்ததும் உங்களுக்கு வருடம் மற்றும் மாதம் வாரியாக விவரங்கள் வரும்
பின் நீங்கள் தேடவேண்டிய வருடம் மற்றும் தேதியை கிளிக் செய்து Jump to Date என கொடுத்தால், அந்த தேதியில் நீங்கள் செய்த மெசேஜ், போட்டோ ஆகிய விவரங்கள் வரும்

Tags :
|