Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதி; நல்ல முடிவு வரும் என்று தகவல்

தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதி; நல்ல முடிவு வரும் என்று தகவல்

By: Nagaraj Thu, 31 Dec 2020 2:25:07 PM

தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதி; நல்ல முடிவு வரும் என்று தகவல்

தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதி குறித்து முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் இணைந்து நடித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக, திரையரங்குகள் 8 மாதங்களாக இயங்கவில்லை. எனவே மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் சந்தித்துப் பேசினார்.

100 percent audience,permission,kollywood,theater ,100 சதவீத பார்வையாளர்கள், அனுமதி, கோலிவுட், திரையரங்கு

அப்போது தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு முதல்வரிடம், நடிகர் விஜய் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்குவது குறித்து முதல்வர் எடப்பாடி நல்ல முடிவு எடுப்பர் என செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு பெரிய பட்ஜெட் படம் திரையரங்கில் வெளியாக உள்ளதால் கோரிக்கை ஏற்கப்பட வாய்ப்புள்ளது.

திரையரங்குகளை சார்ந்து பல்வேறு தொழிலாளர்கள் உள்ள நிலையில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags :