- வீடு›
- பொழுதுபோக்கு›
- மஹா வெற்றிப்படமா? கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கேள்வி
மஹா வெற்றிப்படமா? கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கேள்வி
By: Nagaraj Sun, 07 Aug 2022 5:07:08 PM
சென்னை: தனது 50வது படத்தின் வெற்றியை நடிகை ஹன்சிகா கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை சிலர் கிண்டல் செய்தாலும் ரசிகர் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. தனுஷின் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானார். எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், போகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பல மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்த ஹன்சிகாவிற்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. கடந்த சில ஆண்டுகளாக வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்துள்ள அவர் மீண்டும் பிசியாக நடித்து வருகிறார்.
தனது 50வது படமான 'மஹா' படத்தில் சிம்புடன் இணைந்து ஹன்சிகா நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் தனது பிறந்தநாளை வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஹன்சிகா கொண்டாடவுள்ளார். இதையொட்டி பிறந்தநாள் மற்றும் மஹா படத்தின் வெற்றியை கேக் வெட்டி ஹன்சிகா கொண்டாடியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.