- வீடு›
- பொழுதுபோக்கு›
- அப்போ வந்த படத்திற்கு இப்போ விமர்சனமா? பின்னணி இதுதான்!!!
அப்போ வந்த படத்திற்கு இப்போ விமர்சனமா? பின்னணி இதுதான்!!!
By: Nagaraj Sun, 20 Nov 2022 2:15:42 PM
மும்பை: விமர்சகர் கமால் ரஷித் கான் திரிஷ்யம் 2 திரைப்படத்தை விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இதற்கான பின்னணி காரணம் தெரிய வந்துள்ளது.
பாலிவுட் நடிகர் மற்றும் யூடியூப் விமர்சகருமான கமல் ரஷித் கான் பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் சென்ற சில மாதங்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் மோகன்லால் நடிப்பில் சென்ற வருடம் வெளியான திரிஷ்யம்-2 திரைப்படம் பற்றி கிண்டலாக பதிவிட்டிருக்கின்றார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: பயங்கரம் சோனி டிவியில் ஒளிபரப்பாகும் சிஐடி மூசா தொடர் இந்த திரைப்படத்தை விட 100 மடங்கு சிறப்பாக உள்ளது என கூறியிருந்தார்.
சென்ற வருடம் வெளியான இத்திரைப்படத்தை அவர் ஏன் இப்போது தேவையில்லாமல்
விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் என கேள்வி எழுந்த நிலையில்.
அதற்கு காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. அது அஜய் தேவ்கனுக்கு தானாம்.
திரிஷ்யம்-2 திரைப்படத்தின் ஹிந்தி ரிமேக் வெளியாகி இருக்கிறது. அதில் அஜய்
தேவ்கன், ஸ்ரேயா, தபு உள்ளிட்ட நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படம்
நேரடியாக இந்தியில் வெளியாகி இருப்பதால் நேரடியாக விமர்சனம் செய்தால்
தனக்கு சிக்கல் வந்துவிடும் என எண்ணி மலையாளத்தில் வெளியான திரிஷ்யம்-2
திரைப்படத்தை தாக்குவது போல இவர் பதிவிட்டிருக்கிறார். இரண்டும் ஒரே கதை
என்பதால் மோகன்லால் திரைப்படத்தை விமர்சித்தால் ஹிந்தி திரைப்படத்தை
பார்க்காமல் தவிப்பார்கள் என இவர் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றார்.