Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பெங்களூரில் பைக்கில் சென்று கொண்டே லேப்டாப்பில் வேலை செய்த இளைஞர்..

பெங்களூரில் பைக்கில் சென்று கொண்டே லேப்டாப்பில் வேலை செய்த இளைஞர்..

By: Monisha Wed, 13 July 2022 8:05:58 PM

பெங்களூரில் பைக்கில் சென்று கொண்டே லேப்டாப்பில் வேலை செய்த இளைஞர்..

சில தினங்களுக்கு முன்னர் பெங்களூரு நகரத்தின் மைய மேம்பாலம் ஒன்றில் பைக்கில் அமர்ந்தபடி ஒருவர் பைக்பை வைத்து வேலை செய்துகொண்டே பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லிங்க்ட்இன் எனும் சமூக வலைதளத்தில் ஹர்ஷ்மீத் சிங் எனும் பயனர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று பயங்கர வைரலானது. புகைப்படத்துடன், "பெங்களூரு சிறப்பானதா அல்லது மோசமானதா?" என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.மேலும், "இரவு 11 மணியளவில் நகரத்தின் பரபரப்பான மேம்பாலம் ஒன்றில் இந்த இளைஞர் லேப்டாப் வைத்து வேலை செய்தவாறு பயணித்துக்கொண்டிருக்கிறான்.

சக ஊழியரின் உயிரை பணயமாக வைத்து அவசரமாக வேலையை முடிக்க விரும்பும் தலைமையா நீங்கள்? எனில் உங்களின் சிந்தனையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது" என்றும் குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார்.

bike,road,work,laptop ,பைக்,பைக்,வேலை,இளைஞர் ,

இந்த போஸ்ட்க்கு ஏறத்தாழ 40,000 லைக்குகள் குவிந்துள்ளன. பலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இதில் சிலர் ஹர்ஷத்தின் கருத்தை வரவேற்றனர். பலர் மாற்று கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். சிலர் இது பெங்களூரு இல்லை எனவும் கூறியுள்ளனர்.

Tags :
|
|
|