Advertisement

நடிகர் அஜித் தந்தை காலமானார்... விஜய் நேரில் சென்று இரங்கல்

By: Nagaraj Fri, 24 Mar 2023 8:19:04 PM

நடிகர் அஜித் தந்தை காலமானார்... விஜய் நேரில் சென்று இரங்கல்

சென்னை: நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலமானார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சசிகலா, தினகரன், அன்புமணி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளங்களில் அஜித்தின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ajith,father,vijay,ajith,death,vijay,death,anjali,irangal ,அஜித், மறைவு, விஜய், காலமானார், அஞ்சலி, இரங்கல்

இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரது தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

விஜய்யின் கார் அஜித் வீட்டிற்குள் நுழையும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|
|
|
|
|
|