Advertisement

மருத்துவ உதவி கோரி கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகர் பெஞ்சமின்

By: Nagaraj Wed, 16 Dec 2020 9:25:28 PM

மருத்துவ உதவி கோரி கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகர் பெஞ்சமின்

மருத்துவ உதவி கோரி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகருமான பெஞ்சமின்.

விஜய்யுடன் சிவகாசி, பார்த்திபனுடன் வெற்றிக்கொடிகட்டு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பெஞ்சமின் ஹார்ட் அட்டாக் காரணமாக மருத்துவனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆகியுள்ளார்.

ஆனால், சிகிச்சை கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் அவர் அவதிப்பட்டு வரும் நிலையில், மருத்துவர் உதவி கேட்டு அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். சேலம் கிருபா மருத்துவமனையில் இரண்டு தினங்களாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அங்கு மேற்கொண்டு சிகிச்சைக்கு அதிக பணம் கேட்டுள்ளனர்.

actor benjamin,tears,plea,medical treatment ,நடிகர் பெஞ்சமின், கண்ணீர், வேண்டுகோள், மருத்துவ சிகிச்சை

ஆஞ்சியோ சிக்சை செய்ய வேண்டும். ஒரு பிளாக்குக்கு ஒரு லட்சம் செலவாகும். மூன்று பிளாக் என்றால் 6 லட்சம், 4 பிளாக் என்றால் 8 லட்சம் செலவாகும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அவ்வளவு தொகைக்கு வழி இல்லாததால், அரசு மருத்துவமனையில் சேர முடிவெடுத்த பெஞ்சமின், நடிகர் ராதாரவியின் பரிந்துரையின் பேரில் சேலம் ஜிஎச்சில் இன்று காலையில் அட்மிட் ஆகியுள்ளார். அங்கு சரியான சிகிச்சை இல்லாததால், இன்று மதியம் அங்கிருந்து கிளம்பி பெங்களூருவில் உள்ள நாராயணா ஹிருதாலயா மருத்துவமனைக்கு புறப்பட்டார்.

இதற்கிடையில் ''அங்க எவ்வளவு கேட்குறாங்கன்னு தெரியல. கடவுள் மேல பாரத்த போட்டுட்டு போறேன்''. மேலும், திரையுலகத்தை சேர்ந்த நண்பர்கள் மருத்துவ உதவிகள் செஞ்சா ரொம்ப நல்லா இருக்கும் என்றும் அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags :
|
|