Advertisement

ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த புதிய பாடலை வெளியிடும் நடிகர் சூர்யா!

By: Monisha Wed, 07 Oct 2020 5:09:24 PM

ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த புதிய பாடலை வெளியிடும் நடிகர் சூர்யா!

இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் கம்போஸ் செய்த புதிய பாடல் ஒன்றை நாளை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து முன்னணி இயக்குனர்களான கார்த்திக் சுப்பராஜ், கௌதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் சுகாசினி ஆகியோர் இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம் 'புத்தம் புது காலை' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதில் ராஜீவ்மேனன் பகுதியின் படத்திற்காக ஜிவி பிரகாஷ் பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடலின் ஒரு சிறு பகுதியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜிவி பிரகாஷ் இந்த முழு பாடலையும் நாளை அதாவது அக்டோபர் 8ஆம் தேதி நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த பாடலை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பாடல் வழக்கம்போல் ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|