Advertisement

உங்கள் பாராட்டு அவ்வளவு சந்தோஷம் தருகிறது; நடிகர் சூர்யா

By: Monisha Fri, 20 Nov 2020 2:13:20 PM

உங்கள் பாராட்டு அவ்வளவு சந்தோஷம் தருகிறது; நடிகர் சூர்யா

சூரரைப்போற்று படத்தில் சிறப்பாக நடித்த சூர்யாவுக்கு கடந்த சில நாட்களாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்தநிலையில் சூர்யாவை திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் வசந்த் கடிதம் ஒன்றை எழுதி பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

"அன்புள்ள சூர்யாவுக்கு...

இந்த பாராட்டு கடிதம்‌ உனக்கு இல்லை... நெடுமாறன்‌ இராஜாங்கத்திற்குதான். இந்த படத்தில் நீ உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறாய்‌! தமிழ்த்திரையுலகில்‌ என்‌ மூலம்‌ நிகழ்ந்த உன்‌ அறிமுகத்திற்க்கு பிறகு கொஞ்சம்‌ கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக்கொண்டு, மிகச்சிறப்பாக உன்‌ நடிப்பை இதுவரை பல படங்களில்‌ வெளிப்படுத்தியிருந்தாலும்‌ இது இதுதான்‌ உன்‌ உச்சம்‌! இப்போதைக்கு!!!

surarai potru,acting,surya,director vasant,praise ,சூரரைப்போற்று,நடிப்பு,சூர்யா,இயக்குனர் வசந்த்,பாராட்டு

நெடுமாறன்‌ இராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை இரத்தமும்‌ சதையுமாக உணர்ந்து வாழ்ந்‌திருக்கிறாய்‌. முதல்‌ காட்சியின்‌ ஆரம்பம்‌ கூட பரவாயில்லை. இறுதியில்‌ நீ வென்ற பிறகு கூட உன்‌ முகத்தில்‌ சிரிப்பு இல்லை. அந்த தீவிரத்தன்மை, அந்த சாதிக்க வேண்டும்‌ என்ற வெறி உன்‌ கண்களில்‌ இறுதிவரை தெரிகிறது. கணல்‌ மணக்கும்‌ பூக்களாக... ஒவ்வொரு காட்சியிலும்‌ நெடுமாறன்‌ தோற்கும்‌ போது ஒவ்வொரு காட்சியிலும்‌ ஜெயிக்கிறது உன்‌ நடிப்பு. எவ்வளவு இயல்பாக அதுவும்‌ எதார்த்தமாக துளி மிகையில்லாமல்‌ ஒரு கதாபாத்திரத்திற்க்கு மிகச்சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்‌. உன்‌ வெற்றியின்‌ பெருமிதத்தில்‌ நான்‌ ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்‌கிறேன்

என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்து விட முடியும்,‌ ஏனென்றால்‌ என்‌ விதை நீ, என்‌ விருட்சம்‌ நீ, எனக்கு எத்தனை பெருமிதம்‌ என்று எழுத முடியாது என உச்‌சி முகந்து உச்சமுகந்து மகிழ்‌கிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்த பாராட்டுக்கு பதிலளித்துள்ள நடிகர் சூர்யா "நான் என்றுமே நீங்கள் விதைத்த விதைதான். உங்கள் பாராட்டு அவ்வளவு சந்தோஷம் தருகிறது. ரொம்ப ரொம்ப நன்றி சார்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|