Advertisement

மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்த நடிகர் விஜய்

By: Nagaraj Thu, 12 Nov 2020 09:16:40 AM

மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்த நடிகர் விஜய்

அப்பாவுக்கு செக் வைக்கும் மகன்... விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள், இளைஞர் அணி தலைவர்களை சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் தந்தைக்கு தொடர் தடை போடுகிறார் விஜய் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு மாற்றங்கள் அரசியல் கட்சிகளுக்குள் நடைபெற்ற வருகிறது. சில நடிகர், நடிகைகள் பிரபலங்கள் கட்சியில் இணைவதும், கட்சிகளை மாற்றுவது நடந்து வருகிறது.

விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த வாரம் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததார். இதையடுத்து நடிகர் விஜய் தனக்கும் தனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tags :