Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஜப்பானின் ஒசாகா திரைப்பட விழாவில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுகிறது

ஜப்பானின் ஒசாகா திரைப்பட விழாவில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுகிறது

By: Nagaraj Mon, 22 May 2023 8:12:06 PM

ஜப்பானின் ஒசாகா திரைப்பட விழாவில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுகிறது

சென்னை: ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு மாஸ்டர் படத்துக்காக வழங்கப்படவுள்ளது.

நடிகர் விஜய். தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்துவருகிறார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்தியாவில் அதிகரித்துள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தில் இந்திய அளவில் பிரபலமான சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

award,best-actor,international,filmfestival,osaka,vijay, ,ஒசாகா, சர்வதேச திரைப்பட விழா, சிறந்த நடிகர், விஜய், விருது

அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கிறார் விஜய். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் 25வது படமாக இது அமையும். இந்தப் படம் சர்வதேச தரத்தில் உருவாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு மாஸ்டர் படத்துக்காக வழங்கப்படவுள்ளது.

மேலும் தலைவி படத்துக்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும், சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும் சார்பட்டா பரம்பரை படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும், மாநாடு படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், ஜெய் பீம் படத்துக்காக சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டனுக்கும் மாநாடு படத்துக்காக சிறந்த திரைக்கதை விருது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்படவிருக்கிறது.

Tags :
|
|
|