Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வேற லெவலுக்கு சென்று விட்ட நடிகர் விஜய்... அடுத்த படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம்

வேற லெவலுக்கு சென்று விட்ட நடிகர் விஜய்... அடுத்த படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம்

By: Nagaraj Fri, 26 May 2023 8:43:24 PM

வேற லெவலுக்கு சென்று விட்ட நடிகர் விஜய்... அடுத்த படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம்

சென்னை: வேற லெவலுக்கு சென்றுவிட்டார் நடிகர் விஜய் என்றுதான் சொல்லணும். எதற்கு தெரியுங்களா. விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்தில் அவருக்கு சம்பளம் ரூ.200 கோடியாம். எப்படி தெரியுங்களா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிக்கிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

salary,rs.200 crores,actor vijay,another level,ags company ,சம்பளம், ரூ.200 கோடி, நடிகர் விஜய், வேற லெவல், ஏஜிஎஸ் நிறுவனம்

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் லியோ திரைப்படம் இதுவரை ரூ. 400 கோடிக்கு பிசினஸ் செய்யப்பட்டுள்ளது.

இதுவே விஜய்யின் திரைவாழ்க்கையில் அதிகமாக வியாபாரம் செய்யப்பட்ட திரைப்படம் என கூறப்படுகிறது. இந்நிலையில், லியோ திரைப்படம் ரூ. 400 கோடி பிசினஸ் ஆனதால் தான், தளபதி 68 படத்திற்கு ரூ. 200 கோடி சம்பளம் தருகிறோம் என ஏ.ஜி.எஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|