- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் விஜய்க்கு கதை ரெடி... இயக்குனர் விஜய் சொன்ன தகவல்
நடிகர் விஜய்க்கு கதை ரெடி... இயக்குனர் விஜய் சொன்ன தகவல்
By: Nagaraj Tue, 09 Aug 2022 10:33:14 PM
சென்னை: விஜய் எப்போது என்னுடன் மீண்டும் பணியாற்ற வேண்டும் என எண்ணுகின்றாரோ அப்போது கண்டிப்பாக இணைவோம் என கூறி இருக்கின்றார் இயக்குனர் விஜய்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தலைவா திரைப்படம் ரசிகர்களிடையே தனியிடம் பிடித்தது.
இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களுக்கு
பிடித்த திரைப்படமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் தலைவா 2 குறித்து
இயக்குனர் விஜய் பேசியது தற்பொழுது வைரலாகி வருகின்றது. அவர்
கூறியுள்ளதாவது, தற்போது விஜய்க்கு ஒரு கதையை தயார் செய்து
வைத்திருக்கின்றேன். விஜய் எப்போது என்னுடன் மீண்டும் பணியாற்ற வேண்டும் என
எண்ணுகின்றாரோ அப்போது கண்டிப்பாக இணைவோம் என கூறி இருக்கின்றார்.
மேலும்
நான் எங்கு சென்றாலும் என்னிடம் தலைவா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து
கேள்வி கேட்கப்பட்டு வருகின்றதாக கூறியுள்ளார். இதனால் இயக்குனர் விஜய்
தலைவா 2 திரைப்படத்தின் கதையை தயார் செய்திருப்பதாக ரசிகர்கள் கருதி
வருகின்றார்கள்.