- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகை ஹன்சிகா திருமண வீடியோ இணையத்தில் செம வைரலாகிறது
நடிகை ஹன்சிகா திருமண வீடியோ இணையத்தில் செம வைரலாகிறது
By: Nagaraj Mon, 05 Dec 2022 10:36:31 AM
சென்னை: ஹன்சிகா திருமணம் முடிந்தது... நடிகை ஹன்சிகா மற்றும் அவரது காதலர் சோஹைல் கத்தூரியா ஆகியோரின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த திருமண வீடியோதான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருக்கும் கோட்டையில் நடந்த இந்த திருமணத்தில் ஹன்சிகாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே ஹன்சிகா திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை ஓடிடி நிறுவனத்திற்கு விற்றுவிட்டார் என செய்தி பரவிய நிலையில் தற்போது வரை திருமண போட்டோ வீடியோ எதுவும் வெளிவராமல் தான் இருந்தது.
இந்நிலையில் தற்போது ஹன்சிகா மற்றும் சோஹைல் இருவரும் திருமண கோலத்தில் ஜோடியாக நடந்து வரும் வீடியோ வெளியாகி இணையத்தில் அதிகம் வைரல் ஆகி இருக்கிறது.