Advertisement

சினிமாவுக்கு முழுக்கு போட நடிகை காஜல் அகர்வால் முடிவு

By: Nagaraj Sat, 26 Dec 2020 3:44 PM

சினிமாவுக்கு முழுக்கு போட நடிகை காஜல் அகர்வால் முடிவு

கணவருடன் இணைந்து வேறு பிசினஸ் செய்ய தொடங்கி உள்ளதால் நடிகை காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலக திட்டமிட்டு உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

தங்கைக்கு திருமணம் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு, நடிகை காஜல் அகர்வால், தான் விரும்பியவரை இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கரம் பிடித்து இருக்கின்றார்.

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார். இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வந்தார்.

actress kajal,business,marriage,fans,cinema ,நடிகை காஜல், பிசினஸ், திருமணம், ரசிகர்கள், சினிமா

கொரோனா காரணமாக படப்பிடிப்பு அனைத்தும் தேங்கி நிற்கின்றது, நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையில் கவுதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் இணைந்து புது பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இன்டீரியர் டெக்கரேஷன் மூலமாக வீட்டை அலங்கரித்து தருவது மட்டுமல்லாமல் வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர்.

இந்த நிறுவனத்தின் அறிமுக விளம்பரப் படத்தில் தனது கணவருடன் இணைந்து நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் ஜெனிலியா, அசின் போன்ற பல நடிகைகள் சினிமா துறையை விட்டு விலகி விட்டனர். தற்போது காஜலும் சினிமா தொழிலை விட்டு விலகி புது தொழிலில் ஈடுபட்டு இருக்கிறாரா என்பது குறித்த சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags :
|