Advertisement

தனது மகன் பிறந்த நாளுக்கு நடிகை சினேகா வெளிட்ட பதிவு

By: Nagaraj Wed, 14 Sept 2022 11:08:37 AM

தனது மகன் பிறந்த நாளுக்கு நடிகை சினேகா வெளிட்ட பதிவு

சென்னை: தலைப்பிள்ளை பெண் பிள்ளையாக இல்லையே என்ற வருத்தமே எங்களுக்கு இப்போது இல்லை' என்று நடிகை சினேகா தனது மகன் குறித்து தெரிவித்துள்ளார்.

புன்னகை இளவரசி என்ற பட்டம் கொண்ட நடிகை சினேகா சமீபத்தில் அவரது மகன் விஹானின் 7வது பிறந்தநாளை கொண்டாடி முடித்தார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது மகனைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

அதில் சினேகா 'எங்களுக்கு பிறக்கும் முதல் குழந்தை பெண் குழந்தையாகத் தான் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் விஹான் பிறந்தார்.

love,word,son,birthday,actress sneha,registration ,அன்பு, வார்த்தை, மகன், பிறந்த நாள், நடிகை சினேகா, பதிவு

இத்தனை ஆண்டுகளில் விஹான் எங்களை அத்தனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தலைப்பிள்ளை பெண் பிள்ளையாக இல்லையே என்ற வருத்தமே எங்களுக்கு இப்போது இல்லை' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தான் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் சினேகா தனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்லம். என் லட்டு, இந்த 7 ஆண்டுகளாக நீ எங்கள் வாழ்க்கையில், அன்பையும், சந்தோஷத்தையும் அள்ளி கொடுத்துள்ளாய். இது போன்ற குழந்தைக்காக தான் அனைத்து பெற்றோரும் கனவு காண்பார்கள்.

நீ எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம். உன் மீது எனக்கிருக்கும் அன்பை வார்த்தைகளால் கூற முடியாது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஹான் தங்கம்!" என்று பதிவிட்டு மகனைக் கொண்டாடி இருந்தார்.

Tags :
|
|
|