Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அஜித் படத்திற்கு துணிவு என்று தலைப்பு... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அஜித் படத்திற்கு துணிவு என்று தலைப்பு... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

By: Nagaraj Wed, 21 Sept 2022 10:01:47 PM

அஜித் படத்திற்கு துணிவு என்று தலைப்பு... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சென்னை: எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு 'துணிவு' என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு இன்று மாலை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து துணிவு என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ajith,vinod,film,title,courage,first look ,அஜித், வினோத், படம், தலைப்பு, துணிவு, பர்ஸ்ட் லுக்

தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாக 'துணிவு' உள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு 'துணிவு' எனப் பெரிடப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்த நிலையில், துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இவர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான 'தீரன் அதிகாரம்' ஒன்று படத்திற்கு இசையமைத்தவர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, மிலன் படத்தொகுப்பு செய்கிறார்.

Tags :
|
|
|
|