- வீடு›
- பொழுதுபோக்கு›
- அதெல்லாம் உண்மையில்லை... உலா வந்த தகவல் பொய்யாம்... பொய்யாம்!!!
அதெல்லாம் உண்மையில்லை... உலா வந்த தகவல் பொய்யாம்... பொய்யாம்!!!
By: Nagaraj Tue, 21 June 2022 6:24:32 PM
சென்னை: அட அது உண்மையில்லையாம்... நடிகர்கள் விஜய்யும் அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே எனும் ஒரே படத்தில் மட்டுமே நடித்துள்ளனர். இப்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு பான் இந்தியா படத்தில் நடிக்க உள்ளதாக வந்த செய்திகள் வதந்திக என்று தெரிய வந்துள்ளது.
நேருக்கு நேர் படத்திலும் இருவரும் நடிப்பதாக இருந்த நிலையில் அஜித் நீக்கப்பட்டுக் கடைசியில் அவருக்குப் பதிலாக நடிகர் சூர்யா இணைந்தார். அதன் பின்னர் விஜய்யும் அஜித்தும் சேர்ந்து நடிக்கும் சூழல் எழவில்லை. சினிமாவைப் பொறுத்தவரை விஜய்யும் அஜித்தும் ரசிகர்களால் எதிரெதிர் துருவங்களாக அறியப்படுகின்றனர்.
இதனால் இவ்விருவரும் இணைந்து நடிப்பது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்துவருகிறது. ஆனால் இருவரையும் இணைத்து படம் எடுக்க சில இயக்குநர்கள் தயாராகவே உள்ளனர். குறிப்பாக இயக்குநர் வெங்கட் பிரபு இதில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்.