Advertisement

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படம் 5 மொழிகளில் தயாராகிறது

By: Nagaraj Tue, 02 May 2023 10:38:36 PM

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படம் 5 மொழிகளில் தயாராகிறது

சென்னை: ஆர்யா நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள படம் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் எஃப்.ஐ.ஆர். அந்த திரைப்படத்தை மனு ஆனந்த் என்பவர் இயக்கியிருந்தார். அவர் தற்போது பிரின்ஸ் பிக்சர் தயாரிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இதற்கான ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன் கையெழுத்தானது. அதன் பிறகு முதற்கட்ட பணிகள் நடந்து வந்தது. மேலும் நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளும் மும்முரமாக நடந்து வந்தது. இந்த படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

arya,first look,gautham karthik,mr. x, ,ஃபர்ஸ்ட் லுக், ஆர்யா, கௌதம் கார்த்திக், மிஸ்டர் எக்ஸ்

இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு படத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். மனு ஆனந்த் இயக்கிய எஃப்.ஐ.ஆர் திரைப்படம் போலவே இந்த திரைப்படமும் வித்தியாசமான கதையுடன் உருவாகவுள்ளது.

மிஸ்டர்.எக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. மரகதநாணயம், கனா போன்ற படங்களுக்கு இசையமைத்த சிபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Tags :
|
|