Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிறந்தநாளின் போது மகள் செய்த செயல்... கதறி அழுத பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா

பிறந்தநாளின் போது மகள் செய்த செயல்... கதறி அழுத பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா

By: Nagaraj Wed, 13 July 2022 3:43:39 PM

பிறந்தநாளின் போது மகள் செய்த செயல்... கதறி அழுத பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா

சென்னை: பிறந்த நாளின் போது தன் மகள் கொடுத்த பல பக்க கடிதத்தை பார்த்து பிக்பாஸ் புகழ் அர்ச்சனா கதறி அழுதுள்ளார். இதை வீடியோவாக அவரே வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

ஜீ தமிழில் முன்னணி தொகுப்பாளராக இருந்த அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் வாய்ப்பு வந்ததால் அவர் அந்த சேனலில் இருந்து விலகி பிக் பாஸ் வீட்டுக்கு சென்றார். அந்த ஷோவில் பங்கேற்றதால் அர்ச்சனா அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்தார். முக்கியமாக அன்பு ஜெயிக்கும் என்று நம்புகிறாயா என்று கூறிய டயலாக்கை வைத்து அர்ச்சனாவை வைத்து செய்தார்கள் நெட்டிசன்கள்.

archana,video,fans,tears,emotional,seven page,daughter ,அர்ச்சனா, வீடியோ, ரசிகர்கள், கண்ணீர், எமோஷ்னல், ஏழு பக்கம், மகள்

தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வரும் அர்ச்சனா சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை தான் அதிகம் சந்திக்கிறார். இது ஒருபுறம் இருக்க அர்ச்சனா சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் தற்போது அவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அவரது மகள் ஸாரா இவரது 40வது பிறந்தநாளுக்கு ஏழு பக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி கொடுத்து எமோஷ்னல் ஆக்கி இருக்கிறார். இதை குறிப்பிட்டு தான் எமோஷ்னலாக அழும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அர்ச்சனா. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|