- வீடு›
- பொழுதுபோக்கு›
- 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது... விஜய் ரசிகர்கள் உற்சாகம்
15 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது... விஜய் ரசிகர்கள் உற்சாகம்
By: Nagaraj Thu, 08 Dec 2022 11:07:25 AM
சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் நடிகர் சிம்பு பாடிய தீ தளபதி பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தில் நடிகர் சிம்பு பாடிய தீ தளபதி என்ற பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளனர்.
இந்த “வாரிசு” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியிருந்தார். முதல் பாடல் லிரிக்ஸ் வெளியான நிலையில் இரண்டாவது பாடலாக சிம்பு பாடியிருந்த தீ தளபதி பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.
செம வரவேற்பை பெற்ற இந்த பாடல் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த தகவலை இணையத்தில் விஜய் ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.