- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் சூர்யாவின் நடிப்பை பாராட்டிய டேவிட் வார்னர்
நடிகர் சூர்யாவின் நடிப்பை பாராட்டிய டேவிட் வார்னர்
By: Nagaraj Thu, 03 Dec 2020 08:47:40 AM

நடிகர் சூர்யாவின் நடிப்பை பார்த்து கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் சூர்யா தனது திறமையான நடிப்பினாலும் ஒரு படத்தில் எடுத்து கொண்ட கேரக்டராகவே மாறிவிடும் நடிகராகவும் இருந்து வருகிறார். சூர்யா 'சூரரைப்போற்று' படத்தில் மாறன் கதாபாத்திரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

கிரிக்கெட் வீரர் மற்றும் டிக் டாக்-ல் பிரபலமாக திகழும் டேவிட் வார்னர்
சூர்யாவையும் விட்டுவைக்கவில்லை. டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் சூர்யாவின் நடிப்பு குறித்து
பாராட்டு தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு நடிகரும் முகத்தில்
மகிழ்ச்சியை கண்ணீருடன் தெரிவித்தவர் இல்லை என்றும் கண்ணீரில் மகிழ்ச்சியான
முகத்தை நடிப்பில் வெளிப்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்றும்
அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். டேவிட் வார்னரின் போட்ட இந்த பதிவு
வைரலாகி விட்டது.








