Advertisement

நடிகர் போண்டா மணிக்கு தனுஷ் ரூ. 1 லட்சம் நிதியுதவி

By: Nagaraj Sun, 25 Sept 2022 5:04:13 PM

நடிகர் போண்டா மணிக்கு தனுஷ் ரூ. 1 லட்சம் நிதியுதவி

சென்னை: போண்டா மணியின் மருத்துவ செலவுக்காக நடிகர் தனுஷ் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜினிகாந்த், விஜய் உள்பட்ட பல்வேறு நடிகர்களுடன் சேர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் போண்டா மணி (வயது 59). இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வருகிறார். 2 சிறுநீரகங்களும் செயலிழந்ததால் சென்னை அரசு ஓமந்தூரார் பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போண்டா மணியை நேரில் சென்று சந்தித்ததோடு, அவரது மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என உறுதியளித்தார்.

actor dhanush,illiterate,bonda money,funding,treatment ,நடிகர் தனுஷ், படிக்காதவன், போண்டா மணி, நிதியுதவி, சிகிச்சை

இதனிடையே போண்டா மணிக்கு நடிகர் விஜய் சேதுபதி, ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். அதே போல், நடிகர் வடிவேலு தன்னுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கும் போண்டா மணியை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதி அளித்திருந்தார்.


இந்நிலையில் தற்போது போண்டா மணியின் மருத்துவ செலவுக்காக நடிகர் தனுஷ், ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார். நடிகர் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் போண்டா மணி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :