- வீடு›
- பொழுதுபோக்கு›
- தளபதி 65 படத்திற்காக விஜய் தனது சம்பளத்தை குறைத்தாரா?
தளபதி 65 படத்திற்காக விஜய் தனது சம்பளத்தை குறைத்தாரா?
By: Monisha Wed, 15 July 2020 4:23:43 PM
நடிகர் விஜய்யின் 'தளபதி 65' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குகிறார். தற்போது 'தளபதி 65' படம் குறித்து வெளிவந்துள்ள புதிய தகவலில் இந்த படத்திற்காக விஜய் தனது சம்பளத்தில் ரூபாய் 20 கோடியை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
'தளபதி 65' படத்திற்காக விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருந்ததாகவும் இந்த சம்பளம் 'அண்ணாத்தத' படத்தில் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளத்தை விட அதிகம் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது உள்ள கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் விஜய் தனது சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் கேட்டு கொண்டதற்கு இணங்க குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகளில் வசூல் குறைவாக இருக்கும் என்பதால், அனைத்து நடிகர்களும் தங்களது சம்பளத்தை தாங்களாகவே முன்வந்து குறைத்து தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
மலையாளம், தெலுங்கு, பாலிவுட் திரையுலகில் பல முன்னணி நடிகர்களும் தங்களது சம்பளத்தை குறைத்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து தயாரிப்பாளரின் சிரமத்தை புரிந்து கொண்ட விஜய் ரூபாய் 20 கோடி தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாகவும், ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேலும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூறியதை விஜய் தரப்பினர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.