Advertisement

இரண்டாவது திருமணத்திற்கு ஓகே சொல்லிட்டாரா டி.டி!!!

By: Nagaraj Mon, 26 Dec 2022 4:35:26 PM

இரண்டாவது திருமணத்திற்கு ஓகே சொல்லிட்டாரா டி.டி!!!

சென்னை: டிடி தனது 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதை டிடி தரப்பு உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இந்த தகவல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார். குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது.

தற்போது வார நிகழ்ச்சிகளையும், முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார். தான் தொகுப்பாளினியாக மட்டும் அல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் டிடி தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவான காஃபி வித் காதல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

internet,information,viral,fans,news,marriage ,இணையம், தகவல், வைரல், ரசிகர்கள், செய்திகள், திருமணம்

டிடிக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில் தற்போது அவர் 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபராம். ஆனால் டிடியின் தரப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகவில்லை.


இருப்பினும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வெகு வேகமாக பரவி வருகிறது. இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Tags :
|
|
|