- வீடு›
- பொழுதுபோக்கு›
- 10 ஆண்டுகளுக்கு பின்னர் பாலிவுட் செல்லும் இயக்குனர் கௌதம் மேனன்
10 ஆண்டுகளுக்கு பின்னர் பாலிவுட் செல்லும் இயக்குனர் கௌதம் மேனன்
By: Nagaraj Wed, 08 Mar 2023 10:27:36 AM
சென்னை: 10 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் கௌதம்மேனன் ஒரு இந்திப் படத்தை இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. படம் திரையரங்குகளில் வெற்றிபெறவில்லை. ஆனால் மற்ற வணிகங்கள் மூலம் படம் வசூல் செய்தது. ஆனால், தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கௌதம் மேனன் தனது அடுத்த படத்தை இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கான ஏக் தீவானா தா படத்தை 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்திப் படம் ஒன்றை இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் போலீஸ் படமாக உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.