- வீடு›
- பொழுதுபோக்கு›
- வெப் தொடரில் நடிக்க உள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்
வெப் தொடரில் நடிக்க உள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்
By: Nagaraj Sun, 21 June 2020 8:29:15 PM
வெப் தொடரில் நடிக்கிறாராம்... தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கவுதம் மேனன், அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன். இவர் இயக்குவதைப்போல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் இவர் சமீபத்தில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், டிரான்ஸ் போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இதனிடையே ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்குனர் கவுதம் மேனனுடன்
இணைந்து வெப் தொடர் ஒன்றில் பணியாற்ற உள்ளதாக சமீபத்தில்
அறிவித்திருந்தார். இந்நிலையில், அந்த வெப் தொடர் குறித்த முக்கிய தகவல்
வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த வெப் தொடரை கிடாரி படத்தை இயக்கிய பிரசாத்
முருகேசன் இயக்க உள்ளாராம்.
இவர் ஏற்கனவே கவுதம் மேனனுடன் இணைந்து
குயின் வெப் தொடரை இயக்கி இருந்தார். மேலும் இந்த வெப் தொடருக்கு மதக்கம்
என பெயரிட்டுள்ளனர். இது திருடன் - போலீஸ் கதை போல இருக்குமாம். இந்த வெப்
தொடரில் கவுதம் மேனன் தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.