Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இயக்குனர் ஹலிதா ஷமீம் படத்தை காண ஆவலோடு காத்திருக்கிறேன்; இயக்குனர் ஷங்கர் தகவல்

இயக்குனர் ஹலிதா ஷமீம் படத்தை காண ஆவலோடு காத்திருக்கிறேன்; இயக்குனர் ஷங்கர் தகவல்

By: Nagaraj Sun, 21 June 2020 8:28:00 PM

இயக்குனர் ஹலிதா ஷமீம் படத்தை காண ஆவலோடு காத்திருக்கிறேன்; இயக்குனர் ஷங்கர் தகவல்

ஆவலுடன் காத்திருக்கும் ஷங்கர்... தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்றழைக்கப்படும் ஷங்கர், இளம் இயக்குனரின் படத்தை காண ஆவலோடு இருப்பதாக கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர்.

இவர் அடுத்ததாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தனக்கு பிடித்த இயக்குனர்கள் பற்றி கூறியுள்ளார்.

fireflies,childhood,director shankar,eager ,மின்மினி படம், குழந்தை பருவம், இயக்குனர் ஷங்கர், ஆவல்

அதன்படி, வெற்றிமாறன், அருவி பட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், லோகேஷ் கனகராஜ், ஹெச்.வினோத் ஆகியோரது படங்கள் தன்னை வெகுவாக கவர்ந்ததாக கூறிய ஷங்கர், சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலிதா ஷமீமையும் வெகுவாக பாராட்டி உள்ளார்.

மேலும் அவர் தற்போது இயக்கி வரும் மின்மினி படத்தை பார்க்க ஆவலோடு இருப்பதாகவும் கூறியுள்ளார். ஏனெனில் மின்மினி படத்தில் குழந்தை பருவ காட்சிகளில் நடித்திருந்தவர்களே, பதின்ம வயது காட்சிகளிலும் நடிக்க வேண்டும் என்பதால், அவர்கள் வளர்வதற்காக 5 ஆண்டுகள் காத்திருந்து எஞ்சியுள்ள காட்சிகளை அவர் படமாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :