- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
By: vaithegi Thu, 02 Nov 2023 11:31:29 AM
சொத்து மதிப்பு ரூ.776 கோடி ...நடிகை ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் இந்தி,தமிழ் என தொடர்ந்து படங்களில் நடித்துவரும் அவர், தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து உள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். தனது 50 -வது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடிய அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நிலையில், ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து அதன்படி ரூ.776 கோடிக்கு அவர் சொத்து மதிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. 30 வருடங்களாக நடித்து வரும் அவர் ஒரு படத்துக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடிவரை சம்பளம் வாங்குகிறார்.
அவருக்கான படப்பிடிப்பு நாட்களைப் பொறுத்து இது மாறுபடும். விளம்பரப் படங்களுக்கு ரூ. 5 முதல் ரூ.6 கோடி சம்பளம் வாங்கும் இவர் ரியல் எஸ்டேட் தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார். மேலும் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இவருக்குச் சொத்துக்கள் இருக்கின்றன