Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • முடிந்தது... கேக் வெட்டிட்டோம்... சிவகார்த்திகேயன் படக்குழு கொண்டாட்டம்

முடிந்தது... கேக் வெட்டிட்டோம்... சிவகார்த்திகேயன் படக்குழு கொண்டாட்டம்

By: Nagaraj Mon, 03 Oct 2022 9:16:04 PM

முடிந்தது... கேக் வெட்டிட்டோம்... சிவகார்த்திகேயன் படக்குழு கொண்டாட்டம்

சென்னை: பிரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.


விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்பு பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.

anchor,marina,prince,sivakarthikeyan,vijay tv , டான், தமன், தொகுப்பார், படக்குழு, ரெமோ

பின்பு மனங்கொத்திபறவை, காக்கிசட்டை, ரெமோ, டான் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது அவர் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது வருகிறது.

இந்நிலையில், ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்சியில் உள்ளனர்.

Tags :
|
|
|