Advertisement

புத்தாண்டில் டபுள் ட்ரீட்... அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

By: Monisha Sat, 19 Dec 2020 3:11:46 PM

புத்தாண்டில் டபுள் ட்ரீட்... அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

தமிழகத்தில் புத்தாண்டை கொண்டாட அனைவரும் தயாராகி வரும் நிலையில், தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டில் வெளிவரும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் புத்தாண்டு தினத்தை சிறப்பு புத்தாண்டாக கொண்டாட தயாராகி வருகின்றனர்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் 'வலிமை' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது மோஷன் போஸ்டர் புத்தாண்டு தினத்தில் வெளிவர வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

new year,double treat,ajith,vijay,fans ,புத்தாண்டு,டபுள் ட்ரீட்,அஜீத்,விஜய்,ரசிகர்கள்

இதனை அடுத்து இந்த புத்தாண்டில் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் புத்தாண்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித், விஜய் ஆகிய இருதரப்பு ரசிகர்களும் இந்த புத்தாண்டை சிறப்பு புத்தாண்டாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாகவும், புத்தாண்டில் டிரைலர் வெளியான உடன் முழு வேகத்தில் புரமோஷன் பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதை அடுத்து அந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|