- வீடு›
- பொழுதுபோக்கு›
- இசையமைத்து வரும் திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகளை கூறும் ஜிவி பிரகாஷ்!
இசையமைத்து வரும் திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகளை கூறும் ஜிவி பிரகாஷ்!
By: Monisha Fri, 29 May 2020 3:35:39 PM
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது தான் இசையமைத்து வரும் திரைப்படங்கள் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை அள்ளி கொடுத்துள்ளார்.
அவர் நடித்து முடித்து வெளியிட தயாராக இருக்கும் திரைப்படங்களில் ஒன்று ’ஜெயில்’. இந்த படத்தின் பாடல் ஒன்று குறித்து ஜிவி பிரகாஷ் தற்போது அப்டேட் செய்துள்ளார். ’ஜெயில்’ படத்தில் இடம்பெற்ற ’காத்தோடு’ என்ற தனுஷ் பாடியிருக்கும் பாடலை கபிலன் எழுதி உள்ளதாகவும் விரைவில் இந்த பாடல் குறித்த ஆச்சரியமான அப்டேட் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சூர்யாவின் ‘சூரரை போற்று’ படத்தில் மூன்று டிராக்குகள் புதியதாக இணைக்கப்பட்டுளதாகவும், அது குறித்து அப்டேட்டும் விரைவில் வரும் என்றும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி தனுஷின் 43வது படமான ‘D43’ படத்தின் இசை குறித்து அவர் கூறும்போது இந்த படத்தின் பின்னணி இசை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திலும் தனுஷ் ஒரு பாடலை எழுதி பாடியுள்ளார். இதுகுறித்த தகவல் விரைவில் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.