- வீடு›
- பொழுதுபோக்கு›
- தோழியின் கணவரை திருமணம் செய்கிறாராம் ஹன்சிகா
தோழியின் கணவரை திருமணம் செய்கிறாராம் ஹன்சிகா
By: Nagaraj Fri, 04 Nov 2022 6:00:13 PM
சென்னை: தனது தோழியின் கணவரைதான் ஹன்சிகா திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் நடிகை ஹன்சிகா. தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான சோகேலை திருமணம் செய்யவுள்ளதை சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தி இருந்தார்.
இவர்களது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெறவுள்ளதாக
கூறப்பட்டது. இந்நிலையில், சோகேலுக்கும் ஹன்சிகாவின் தோழிக்கும் ஏற்கனவே
திருமணம் நடந்து பிரிந்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தொழிலதிபர் சோகேல் கடந்த 2016-ம் ஆண்டு ஹன்சிகாவின் தோழி ரிங்கு
என்பவரை திருமணம் செய்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்
விவாகரத்து பெற்றதாகவும் செய்தி பரவி வருகிறது.
அதுமட்டுமல்லாமல்
இவர்களின் திருமண நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா பங்கேற்றுள்ளார். இது
தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.