- வீடு›
- பொழுதுபோக்கு›
- ராஜா ராணி-2 சீரியல் இயக்குனரே மாறிட்டாரா? ரசிகர்கள் அதிர்ச்சி
ராஜா ராணி-2 சீரியல் இயக்குனரே மாறிட்டாரா? ரசிகர்கள் அதிர்ச்சி
By: Nagaraj Thu, 23 Feb 2023 10:17:14 PM
சென்னை: என்னது இயக்குனரே மாறிட்டாரா?... விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பெரும்பாலான சீரியல்கள் சிறியவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைத்து வயதினரையும் கவர்ந்த தொடராக உள்ளது.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றான ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து இயக்குனரே விலகி விட்டதாக வெளியாகியுள்ள தகவல் தான் தற்போது ஒட்டு மொத்த ரசிகர்களையுமே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில், சரவணன் மீனாட்சி, கானா காணும் காலங்கள், ராஜா ராணி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களை தொடர்ந்து இயக்கி வருபவர் தான், பிரவீன் பென்னட்.
இவருடைய சீரியல்கள் எந்த அளவுக்கு மிகவும் பிரபலமோ அதே போல் இவரும் மிகவும் பிரபலம். இவருடன் பணியாற்றுவது, மிகவும் ஜாலியான அனுபவம் என பல சீரியல் பிரபலங்கள் கூறுவது உண்டு.
ஆனால் இவருடைய சீரியலில் இருந்து, நடிகை ரியா விஸ்வநாதன் திடீர் என எவ்வித அறிவிப்பும் இல்லாமல் வெளியேற்றப்பட்டது ஏன்? கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து தான் விலகி விட்டதாகவும், எனவே இந்த சீரியலின் நாயகி ஏன்? மாற்றப்பட்டார் என்பது குறித்து தனக்கு தெரியாது என இயக்குனுர் பிரவீன் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது இந்த சீரியலை புது இயக்குனர் ஒருவர் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.