Advertisement

அப்படி இருந்த இவரா... இப்படி!!! வைரலாகும் திருமண புகைப்படம்

By: Nagaraj Sun, 11 Dec 2022 11:57:45 AM

அப்படி இருந்த இவரா... இப்படி!!! வைரலாகும் திருமண புகைப்படம்

சென்னை: திருமணத்தின் போது எடுக்கப்பட்ட நடிகை தேவதர்ஷினியின் புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

சினிமாவில் நுழைந்தாலே அவர்கள் பெரிய அளவில் ரீச் பெற்றுவிடுகிறார்கள் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆனால் அப்படி ஒன்றும் கிடையாது, நிறைய உழைக்க வேண்டும். அப்படி தனது இளம் வயதிலேயே தொகுப்பாளினியாக பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து இப்போது பிரபல நாயகியாக வலம் வருபவர் தான் தேவதர்ஷினி.

devadarshini,marriage,photography,main character,cinema ,தேவதர்ஷினி, திருமணம், புகைப்படம், முக்கிய கதாபாத்திரம், சினிமா

நிறைய காமெடி காட்சிகள் என நடித்து மக்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். நடிகை தேவதர்ஷினி தன்னுடன் சீரியல் ஒன்றில் இணைந்து நடித்த சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் இருக்கிறார், அவர் 96 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது தேவதர்ஷினி-சேத்தன் ஆகியோரின் திருமண புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தேவதர்ஷினி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார். அப்போது இருந்த தேவதர்ஷினியா இவர் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :