Advertisement

விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை

By: Nagaraj Fri, 18 Nov 2022 12:27:46 PM

விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை

சென்னை: பெரிய நடிகரின் படம் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்த்தால் அப்படி நடக்கவில்லை, ஆனால் சிறிய படம் சாதாரண வசூல் செய்யும் என பார்த்தால் மாஸ் வசூல் செய்கிறது. அப்படி வசூலில் அள்ளிய படம்தான் லவ்டுடே. இதன் இயக்குனர் பதிவு என்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

புதுமுகங்கள் இணைய உருவான ஒரு திரைப்படம் தான் லவ் டுடே. இளம் இயக்குனர் பிரதீப் இயக்கி, நடித்துள்ள இப்படம் கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியானது. இப்படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது.

people,support,director,record,dispute,explanation ,மக்கள், ஆதரிக்கின்றனர், இயக்குனர், பதிவு, சர்ச்சை, விளக்கம்

வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் பிரதீப் பழைய சமூக வலைதளத்தில் இருந்த ஒரு பதிவை ரசிகர்கள் புகைப்படம் எடுத்து வைரலாக்க அது சர்ச்சையாக பேசப்பட்டது. இதுகுறித்து பிரதீப் தனது பதிவில், அதிகம் பரவி வரும் பதிவுகள் Photoshopped செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் பேஸ்புக் கணக்கு Deactivate செய்யப்பட்டது.

விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறாரகள் என்பதை காட்டியதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்" என ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Tags :
|
|