Advertisement

ரஜினி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

By: Nagaraj Thu, 10 Dec 2020 08:55 AM

ரஜினி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

பாதுகாப்பு அதிகரிப்பு... சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகா் ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடிகா் ரஜினி வீட்டைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவரது தெரு பகுதியிலும், வீட்டின் முன்பும் சுமாா் 15 போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

rajini house,security,police,vehicles,detention ,ரஜினி வீடு, பாதுகாப்பு, போலீசார், வாகனங்கள், தடுப்பு

தெருவின் நுழைவுப் பகுதியிலும் தடுப்பு அமைத்துள்ளனர். வீடுகளின் உரிமையாளா்களின் வாகனங்களை மட்டுமே போலீஸாா் அனுமதிக்கின்றனா்.

மேலும், முன் அனுமதி பெற்றவா்களின் வாகனங்கள் மட்டுமே ரஜினி வீட்டுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் ரஜினி வீட்டை சுற்றி ரோந்து போலீஸாரும் கண்காணித்து வருகின்றனா்.

Tags :
|