- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் சூர்யாவின் அடுத்த மூன்று படங்கள் குறித்த தகவல்!
நடிகர் சூர்யாவின் அடுத்த மூன்று படங்கள் குறித்த தகவல்!
By: Monisha Sun, 01 Nov 2020 3:34:11 PM
நடிகர் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது அடுத்த மூன்று படங்கள் குறித்த தகவலை தெரிவித்து உள்ளார்.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான மிகப்பெரிய எதிர்பார்க்கக்குரிய திரைப்படமான 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவலை தெரிவித்து உள்ளார்.
சூர்யா நடிக்கவிருக்கும் 39வது திரைப்படம் 'நவரசா' என்ற ஆந்தாலஜி திரைப்படம் என்றும், இதனை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என்றும் அதன்பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரை படத்தில் நடிக்கவுள்ளதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.
எனவே சூர்யாவின் அடுத்த மூன்று படங்கள் இவைகள் தான் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.