- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் சிவகார்த்திகேயன் பாஜகவில் இணைகிறாரா? காயத்ரி ரகுராம் கருத்தால் பரபரப்பு
நடிகர் சிவகார்த்திகேயன் பாஜகவில் இணைகிறாரா? காயத்ரி ரகுராம் கருத்தால் பரபரப்பு
By: Monisha Wed, 09 Sept 2020 3:34:29 PM
கோலிவுட் திரையுலகில் ஏற்கனவே பல நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என ஒரு பட்டாளமே பாஜகவில் இணைந்துள்ளது
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் விரைவில் பாஜகவில் இணையவிருப்பதாக சமூக வலைதளங்களிலும் ஒருசில யூடியூப் சேனல்களிலும் வதந்தி கிளம்பி வருகிறது. ஆனால் பாஜக உள்பட எந்த கட்சியிலும் சிவகார்த்திகேயன் இணைய மாட்டார் என்றும், அவர் அரசியலில் ஈடுபட மாட்டார் என்றும் அவரது தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜக பிரமுகரும், நடிகையும், நடன இயக்குனரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் இதுகுறித்து கூறிய போது 'நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பமிருந்தால் பாஜகவில் இணையலாம்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் காலம் விரைவில் வரும் என்றும், பாஜக எப்படி ஆட்சி அமைக்கும் என்பது விரைவில் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். காயத்ரி ரகுராமனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.