Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கணவர், தாயார் கொடுத்த மன அழுத்தம்தான் நடிகை சித்ரா தற்கொலைக்கு காரணமா?

கணவர், தாயார் கொடுத்த மன அழுத்தம்தான் நடிகை சித்ரா தற்கொலைக்கு காரணமா?

By: Nagaraj Fri, 11 Dec 2020 2:09:38 PM

கணவர், தாயார் கொடுத்த மன அழுத்தம்தான் நடிகை சித்ரா தற்கொலைக்கு காரணமா?

கணவர் மற்றும் தாய் கொடுத்த மன அழுத்தம்தான் சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வந்தனர். இந்நிலையில், நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|